Monday, 12 February 2018

ஏக்கம்,

காலையில் புன்னகையோடு பூத்த என் வாச மலரே,
மாலையில் மயக்கதோடு தலை சாய்த்து மௌனம் கொள்வது ஏன்.!?
உன் இதலினும் மெல்லிய அவள் விரல் கொண்டு முடி போட்ட, கூந்தல் ஏறி உன்னை அழகு படுத்தி கொள்ளும், எண்ணம் ஈடேறவில்லை என ஏக்கத்தில் தலை சாய்த்து, அழுகின்றாயா...!!? என் தாலம் பூவே..

Saturday, 10 February 2018

பூவின் மொழி..

பன்றிமலை வரலாறு,

#பந்தி வைத்த ஊர் பன்றிமலை.. என வரலாற்றை தவறாக பதிவு செய்த தின தந்தி..
....................................................................
       கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி
தின தந்தி திண்டுக்கல் பதிப்பகத்தில் பந்தி வைத்த ஊர் பன்றிமலை என்னும் தலைப்பில் நமது ஊரை பற்றி சிறப்பு கட்டுரை ஒன்று வெளியிட்டிருந்தார்கள், அதில் நமது ஊரின் சிறப்புகளை அழகாக வெளியிட்டிருந்தார்கள் அது என்னை போன்று வெளியூரில் வாழும் உள்ளூர் வாசிகளிடையே மகிழ்ச்சியை கொடுத்தாலும், நமது ஊரின் பெயர் வர காரணம் என்னும் தலைப்பில் ஊர் பெரியவர்களிடம் கேட்டு அறிந்தது என்று பன்றி கறி வைத்து விருந்து வைத்ததால் அந்த பெயர் வந்ததாக மேம் போக்காக சொல்லிவிட்டார்கள். ஆனால் நம்மூரில் அதிக பட்சமாக 80 வயதை தாண்டிய முதியவர்கள் இல்லை, அவர்களும் அப்பா, தாத்தா என சொல் வழக்கில் கேட்டு வந்தாலும், உண்மை அதுவல்ல நமது ஊரின் இயற் பெயரே பன்றி மலை தான், அதற்கு உதாரணமாக நமது ஊரின் இன்னொரு பெயரான வராக கிரி, இது ஒரு சம்ஸ்கிருத சொல், சமஸ்கிருதத்தில் வராக என்றால் பன்றி, கிரி என்றால் மலை, ஆக பன்றிமலை தன இயற் பெயரே, இது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாள் கட்ட பட்ட பழனி அருள் மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவில் சுற்று சுவரிலும், தேவதான பட்டி அருள் மிகு மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில் தல வரலாற்றிலும், வராக கிரி என்றே நம்மூரை குறிப்பிடருறுகிறார்கள்,  ஆக பன்றி மலை என்பதே நமது ஊரின் இயற் பெயர், இந்த பெயர் வந்ததற்கான காரணத்தை பார்ப்போம், ஹிந்தி போன்ற நாட்டின் ஆட்சி மொழியே தமிழ் நாட்டில் இல்லாத பொழுது, வராக கிரி என்னும் சம்ஸ்கிருத சொல்லில் நமது ஊருக்கு பெயர் வந்தது எப்படி, அதுவும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே? இதை பற்றிய என் தேடலில் எனக்கு கிடைத்த தகவல்கள் எனக்கு மிகவும் வியப்பையும், ஆச்சிரியத்தையும் ஊட்டின, என்னுடைய தேடல்கள் இன்னும் முழுமை பெறாவிட்டாலும் அதை பற்றி சொல்லும் நேரம் இப்பொழுது கட்டாய மாக்கப்பட்டது, ஏனெனில் நமது ஊரின் புண்ணிய வரலாறு இப்படி கீழ் தரமாக அடுத்த தலை முறைக்கு செல்ல வேண்டாமென   அதை  இப்பொழுது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன், சமஸ்கிருதம், கோவிலில் இறைவனுக்கு பூஜை புரியும் மொழி, அது இறைவனுடன் உரையாட சித்தர் பெருமக்கள் பயன் படுத்திய மொழி, ஆம் சித்தர் பெருமக்களால் நமது ஊரை வராக கிரி என்று பெயர் சூட்ட பட்டது,  அது நாளடைவில் தமிழ் மொழி பெயர்க்க மாறி பன்றிமலை என்று அழைக்கப்பட்டது, ஆம் சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி நாம் பன்றிமலை, இதை உறுதி படுத்த சித்தர்கள் பற்றிய ஆராய்ச்சி செய்ப்பவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம், மேலும் நமது ஊரின் வட மேற்க்கே 5 ஆவது மலை குன்றில் உள்ள கதவு நாச்சியம்மன், மலை குகை கோவிலும், 7 வது மலை குன்றில் உள்ள தாண்டிக்குடி குள்ள மனிதர்கள் வாழ்ந்த குகை வீடுகளும் இதற்கு சான்று, சித்தர் பெருமக்கள் குகை வழிபாட்டையே மேற் கொண்டனர், மேலும் சரியான அகழ்வாராய்ச்சி இல்லாததால் நமது ஊரின் தொன்மை மறைக்க பட்டுள்ளது, நமது ஊரின் துர்கை அம்மன் சன்னதியில் உள்ள பலங் காலத்து கல்வெட்டுகளும் இதற்கு ஒரு சான்றே, அவைகளின் உண்மை நிலை அறியாமல் இப்போலுது மேல் மந்தைக்கு செல்லும் படி கட்டுகளின் தடுப்புகளாக காட்சி அளிக்கின்றன, நமது   ஊரில் சித்தர் பெருமக்கள் வாழ்ந்ததோடு மட்டுமின்றி இன்னும் வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள், அதற்கு மேலும் ஒரு முக்கிய உதாரணம் நாம் இதுவரை காவல் தெய்வமாக நினைத்து கொண்டிருக்கும், நமது ஊர் குல தெய்வம் ஸ்ரீ தோட்ட மலையாண்டி சித்தரே, ஆம், இவர் ஸ்ரீ முருக பெருமான் சித்தர் வழியில் வந்து, நம்மளோடு இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார், ஸ்ரீ முருக பெருமானை சித்தராக ஏற்று கொண்டவைகளுக்கே இது புரியும், அவர் உருவம் அற்றவர், பழங்காலத்தில் நம் முன்னோர்கள் அவருக்கு உருவம் அல்லாது கூம்பு கல் வைத்தே வழிபட்டனர், காலப்போக்கில் அவரை காவல் தெய்வம் ஆக்கி காவல் தெய்வம் கருப்புசாமி உருவம் கொடுத்து அவருக்கு உயிர் பலி கொடுத்து இப்போது வணங்கி கொண்டு இருக்கிறோம், இம்முறை தவறு என்பதற்கு எடுத்து காட்டாக, அணைத்து ஊர் காவல் தெய்வங்களுக்கும், ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி பலி கொடுத்து வணங்குவர், அனால் நம் தோட்ட மலையாண்டி சித்தருக்கு ஊர் மக்கள் ஒன்று கூடி சக்கரை பொங்கல் மட்டும் தான் படைக்கின்றோம், மேலும் ஸ்ரீ முருக பெருமானுக்கு பங்குனி காவடி செலுத்தும் பொது முதல் பூஜையாக ஸ்ரீ தோட்ட மலையாண்டி சித்தருக்கே தீர்த்தம் செலுத்துகிறோம், ஆனால் அவருக்கு பலி கொடுத்து வணங்குவதை ஊர் மக்கள் ஒன்று கூடி செய்வதில்லை, அது தனி ஆட்களாக மட்டும் தான் செய்கிறார்கள், இதுவே இது இடையில் புகுத்த பட்டதற்கு சான்று,
மேலும் அவரை சித்தராகவே வணங்கி, சித்தர் வாழும் பன்றி மலை எனது ஊர் என்று கம்பீரமாக எடுத்துரைப்போம், ஸ்ரீ தோட்ட மலையாண்டி சித்தர் புகழ் அறிந்து உலக மக்கள் அவரை தேடி நம் பன்றி மலை வரும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை,
    ஓம் ஸ்ரீ தோட்ட மலையாண்டி சித்தர் ஸ்வாமிகளே சரணம்..
                      பக்தியுடன்
     ரா.சுரேஷ்பெருமாள்சாமி..
                   பன்றிமலை
மேலும் இந்த பேஜ்யை லைக் செய்து பாலோவ் செய்யவும். https://www.facebook.com/thirukumarancreators/
கூகுலில் தொடர https://plus.google.com/collection/gpx9lB
இனையத்தில் http://sureshperumalsamy.blogspot.com