Monday, 13 February 2017

மனைவி

என் மனைவியாக நீ கிடைத்தால்

நாள் ஒன்றுக்கு நாலு சண்டை வேண்டும்

நான்கும் அன்று இரவே முடிய வேண்டும்

இரவில் புதிய சண்டை வேண்டும்

எப்போதும் போல அதிலும் நீயே வெற்றி பெற வேண்டும்

என் முத்த ஈரத்தில் நீ கண் விழிக்க வேண்டும்

கண் விழித்த உனை பார்த்தே தினம் என் காலை விடிய வேண்டும்

முத்தத்தின் ஈரம் காய்ந்து போவதற்கு முன் சண்டைகளுடன் இரவு தொடங்க வேண்டும்

என் சமையலில் விருந்தளிக்க விடுமுறை நாட்கள் வேண்டும்

உனக்காக பணி புரிய உன் முடியாத நாட்கள் வர வேண்டும்

உன்னுடன் ஊர் சுற்ற ஒரு புது உலகம் வேண்டும்

உருவம் இல்லா உயிர் ஒன்று உன் வயிற்றில் கருவாக வேண்டும்

ஒன்றே போதும் என்று தினம் கெஞ்ச வேண்டும்

நீ எனக்கு அளிக்கும் முத்தத்தை பங்கு பிரிக்க உனை போல் அழகு குழந்தை வர வேண்டும்

இருவருக்கும் தாயாக நீ வேண்டும்

தலையனையாய் நீ வேண்டும்
விடியல் இல்லாத இரவு வேண்டும்

இறுதியாக ஒரு வரம் வேண்டும்

என் ஆயுள் முடியும் அந்த நொடி உன் முத்த இதழை பொறுத்தி விடு
அந்த முத்த ஈரம் காயும் முன்னே உன் மூச்சையும் நிறுத்தி விடு

((என்னை விட நல்லா எவன் உன்னை பார்த்துப்பான்))))

என் கனவு காதலுக்கு வேண்டும் (டும்டும்டும்டும்..
கொட்டிய உன்னிடம் காதல் சொல்லாத காதல் கோழை நான்...

No comments:

Post a Comment