Monday, 28 November 2016

மஞ்சள் மகிமை

நம் தமிழ் பெண்கள் ஏன் மஞ்சள் கயிற்றில் தாலி அணிய வேண்டும் ? இந்தப் பழக்கம் ஏன் வழக்கமானது
*********************************
நம் தமிழ் பெண்கள் ஏன் மஞ்சள் கயிற்றில் தாலி அணிய வேண்டும் ? இந்தப் பழக்கம் ஏன் வழக்கமானது ?

ஒவ்வொரு இடத்தின் தட்பவெட்ப நிலையை பொறுத்தே பழக்க வழக்கங்கள் அமைகின்றன.

மஞ்சள் தாலிக்கயிறு அணிந்து குளிக்கும்போது தினமும் தாலியில் மஞ்சளைப் பூசுகின்றனர்.

மஞ்சள் என்பது ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினி..

அப்போதெல்லாம் மணமான பெண் அடுத்த மூன்று மாதங்களில் ஒரு கருவை சுமக்க தயாராகிறாள். அப்போது அப்பெண் பல்வேறு நோய் தொற்றுகளுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது . .கிருமி நாசினியான மஞ்சள் தாயையும் அவள் வயிற்றில் வளரும் சேயையும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது.

பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட மஞ்சள்கயிறு தாலியில் கோர்த்து போட்டிருந்தனர். அப்போதெல்லாம் நம் தமிழகத்தில் எவ்வளவு சுகபிரசவங்கள் நடந்தது என்றும், தங்க செயினில் தாலி அணியும் இப்போது எவ்வளவு சுகபிரசவங்கள் நடை பெறுகிறது என்பதையும் கணக்கிட்டுப் பார்த்தால் இந்த உண்மை நமக்குப் புரியும் .

அது போல் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை எத்தனை பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் இருந்தது, இப்போது எத்தனை பெண்களுக்கு இருக்கிறது என்றும் கணக்கிட்டுப் பார்த்தால் நமக்கு நன்கு புரியும்.

இப்போதும் கூட கிராமங்களில் கர்ப்பம் தரித்த பெண்கள் வெளியூர்களுக்கு செல்லும் போது தலையில் வேப்பிலை இலையை செருகி வைப்பார்கள் அது எதற்காக ? வேப்பிலை ஒரு சிறந்த கிருமிநாசினி. கர்ப்பிணிகள் தலையில் இருக்கும் வேப்பிலையானது அவர்கள் செல்லும் வழியில் சுவாசிக்கும் காற்றில் இருக்கும் கிருமி தொற்றிலிருந்து காக்கிறது .

மேலைநாட்டினர் அவற்றின் மகிமையைப் புரிந்துக்கொண்டு மஞ்சளுக்கும், வேப்பிலைக்கும் உரிமை கொண்டாடுகின்றனர். பகுத்தறிவு என்று நாம் நமது முன்னோரின் சம்பிரதாயங்களில் இருக்கும் விஞ்ஞான அறிவைப் புரிந்துகொள்ளாமல் கேலிசெய்து கேவலப்படுத்துகிறோம் .

நம் முன்னோர் ஒன்றும் முட்டாள்கள் இல்லை..!

இப்போது நாம் பேசும் பகுத்தறிவு அவர்களின் கால் தூசுக்கு ஈடாகாது..!

நம் முன்னோரின் பழக்கவழக்கங்களை நம்மால் நடைமுறைப்படுத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை... அவற்றைக் கேலி செய்யாமல் இருந்தாலே போதும்..!

நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல..!

Sunday, 14 August 2016

தோழி பத்மபிரியாவின் கவிதை வரிகள்

சுதந்திரம்.....
யாருக்கு...?
எங்கே.....?
எப்போது...?
எதற்கு...?
இன்னும் கேள்வி....
குறிகளாய்...?
நிஜத்தில் சுதந்திரம்...
கிடைத்ததா....?
ஏற்றத்தாழ்வு நீங்கி விட்டதா ..?
ஏழை பணக்காரன் மாறிவிட்டதா...?
மூன்றுவேலை உணவு எல்லோருக்கும் கிடைத்து விட்டதா..?
எல்லாமே கேள்விகளாய் மட்டும்...?
எங்கே சுதந்திரம்...?
தொலைத் தோமா..?
அல்லது பெற்றோமா..?
தொலைத்தது எங்கே.?
தெரிந்தால் தேடிவிடலாம்...?
ஒருவருக்கொருவர்...அடிமையாகத் தான் இன்றும் .?
வெறும் தேசியக்....
கொடிமட்டும் தான்...
பறக்கின்றது.....
சுதந்திரமாய்.......!!!!
...பத்மபிரியாஸ்ரீ.....

Saturday, 13 August 2016

மானம் கெட்ட ஊடகம்

         மானம் கெட்ட ஊடகம்
அன்பு நன்பர்களே, நாளிதல் படிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்?
இந்திய சுதந்தரத்தில் நாளேடு முக்கிய பங்காட்றியது இது அனைவரும் அறிந்ததே!!! ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி ஒரு தகவலை அனைவரிடமும் கொன்று சேர்பதில் நாளேடு மட்டும்தான் முன்னனியில் இருப்பது, அதுமட்டுமின்றி ஒரு நாட்டின் வளர்ச்சி, புரட்சி,அரசியல் மாற்றம், அரசின் நல்ல திட்டங்களை மக்களிடையே சேர்ப்பது, மக்களின் போராட்டங்களை அரசுக்கு தெரிவிப்பது  போன்ற நல்ல தகவல் பரிமாற்றமாக இருந்த ஊடகங்களின் இன்றைய நிலை என்ன தெரியுமா?
சமுக சேவை செய்து ஊழலை தட்டிக்கேட்டு கைதாகி ஒருவர் சிறை சென்றால் இவன் என்ன தலைப்பு போடுரான் தெரியுமா?
பியூஸ்க்கு சிறையில் ''பியூஸ் பிடுங்கபட்டது மனைவி கதரல் ''
மூன்றெழுத்து நடிகைக்கும் நான்கெழுத்து நடிகருக்கும் கசமுசா,
அதெல்லாம் விட சட்டமன்றத்தை பாட்டுமன்றமாக்கிய கூத்தாடிகளை "பாட்டு பாடி அசத்திய கருணாஸ் உற்ச்சாகத்தில் மிதந்த மன்றம் "  சமுதாயத்தில் எத்தனையோ பிரச்சனைகள் இன்னும் போராட்ட கலத்திலேயே இருக்கின்றன, அதையெல்லாம் அரசுக்கும், மக்களுக்கும் எடுத்துகாட்ட வேன்டிய முக்கிய பொருப்பில் இருக்கும் பத்திரிக்கை துறை இந்த லட்சனத்தில் போகும்னு தெரின்சுதான் என்  தேசிய கவி பாரதி அன்னைக்கே சுதேசிமித்ரன விட்டுடாருனு நினைக்கிறேன்!!! இல்லேனா இன்னைக்கு அதையும் ஜால்ரா போட வச்சுருப்பாங்க!!!
                                                அன்புடன்
                              ரா.சுரேஷ்பெருமாள்சாமி

Thursday, 11 August 2016

வேகம்

வேகம்
அன்பு ஓட்டுனர் நண்பர்களே,
இந்த பதிவு எனது  அன்பு  நண்பரின் வேண்டுகோலுக்காக உங்களுக்கு,
நண்பர்களே நீங்கள் சேர வேண்டிய இலக்கு வெகு தொலைவில் இல்லை! உங்கள் வேகத்தால் 1மணி நேர பயணத்தில் 10 நிமிடம் முன்னர் செல்ல முடியும், ஆனால் உங்களுடைய வேகத்தால் ஏற்படும் விபத்துக்களால் போவது உயிர் சேதம் மட்டுமல்ல!!
பால்குடி மறவா குழந்தைக்கு
தாயிடம் பசி
தந்தையிடம்பாசம்
பள்ளி செல்லும் குழந்தைக்கு
தாயின் கண்டிப்பு
தந்தையின் அனுசரணை
ஒரே மகனோ,மகளோ பெட்ற பெற்றோரின் எண்ணம், வயதாகும் வரை உழைத்து இனிமேலாவது மகனின் வருமானத்தில் உட்கார்ந்து சாப்பிடலாம் என நினணக்கும் பெற்றோர், கஷ்ட பட்ட பெட்றோரை இனி கலங்காமள் வைக்க நினைக்கும் மகன், மகள். கடனும் கஷ்டமும் பட்டு விதைத்து விட்டு அருவடையை எதிர் நோக்கும் விவசாயி, அடுத்தவேலை     உ ணவிற்க்கு தன்னை எதிர்பார்கும் குடும்பத்திற்காக உழைத்து உழைத்து ஓடாய் போன தொழிலாளி, மணம் முடித்து மங்களவாழ்கையை ஆரம்பிக்கும் தம்பதிகள், இன்னும்  இவ்வுழகில் எவ்வளவோ கற்பனையும் காதலும்!!!!! உங்கள்  வேகத்தால் ஏற்படும் விபத்துகளில் நீங்கள் கொல்வது இவர்களில் ஒருவரைத்தான்!! அவர்களை மட்டுமல்ல அவர்களை சார்ந்தவர்களின் கணவுகள், லட்சியங்கள், பாசம், நேசம், உழைப்பு, உணவு இன்ணும் எண்ணட்ற!!!! கொன்றுவிட்டு நீங்கள் செய்வதெல்லாம் விபத்து நீதிமன்றத்தில் அபராதம் கட்டினால் சரியாய் போகும், நீங்கள் கட்டும்  அபராதத்தால் இவட்றில் ஒன்றை திருப்பி தர முடியுமா? பல கணவுகளின் கன்ணீரில் இனி  மேலும் மிதக்காதிர்,
வாகனத்தில் காட்டும் வேகத்தை வாழ்க்கை யில் காட்டுங்கள்,
பயனத்தின் முடிவு     நலமாக இருக்கட்டும்
                       அன்புடன்
        ரா.சுரேஷ் பெருமாள் சாமி